ஐஎஸ்ஐஎஸ்சில் இணைந்த தம்பதி கைது..டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக பகீர் தகவல்

டெல்லி: ஜாமியா நகரில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக ஐஎஸ்எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ள ஒரு தம்பதியரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.


டெல்லியில் கடந்த மாதம் சிஏஏவுக்கு எதிராக மற்றும் ஆதரவானோர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரத்தில் முடிந்தது. இதில் 46 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக பலரையும் டெல்லி போலீசார்இதுவரை கைதுசெய்துள்ளனர்.



இந்நிலையில் டெல்லி ஜாமியாவில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிவிட்டதாக ஜகன்ஜெப் சாமி மற்றும் ஹீனா பஷி பெக் ஆகிய தம்பதியை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் சிரியா மற்றும் ஈராக்கில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.


இது தொடர்பாக டெல்லி துணை போலீஸ் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாஹா கூறுகையில், ஓஹ்க்லாவின் ஜாமியா நகரில் இருந்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன தொடர்புடைய ஜஹான்ஜீப் சாமி மற்றும் ஹினா பஷீர் பேக் தம்பதியினர் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டினர் " என்றார்.


தற்போது முதற்கட்ட விசாரணையில் இந்த ஜோடி ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.கே உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தது மற்றும் தேசிய தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது. தெரிய வந்துள்ளது. ஐ.எஸ்.கே.பி ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பாகும்.